Enable Javscript for better performance
பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th May 2018 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான மார்ச், ஏப்ரல் மாத ஊதியத்தை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமையில் கௌரவ தலைவர் ஜெயசிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன்  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை வியாழக்கிழமை சந்தித்து பி.ஆர்.டிசி. ஊழியர்களின் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாகப் பேசினர்.
    சந்திப்பு குறித்து சம்மேளன நிர்வாகிகள் கூறியது :
    காரைக்கால் பகுதி பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாத ஊதியம் வழங்க வேண்டும், பழகுநர்களுக்கு  நிலுவையில் உள்ள 8 மாத ஊதியத்தை வழங்க வேண்டும், பேருந்துகளுக்குரிய உதிரி பாகங்களை கையிருப்பில் வைத்து பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிமனை முழுவதும் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும். குறிப்பாக,  பேருந்துகளை பழுது பார்க்கும் இடத்தில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.
    கோரிக்கைகளைக்  கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பழகுநர்களுக்கு  நிலுவையில் உள்ள 8 மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற பிரச்னைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் என்றனர்.
    இச்சந்திப்பின் போது பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்க நிர்வாகிகள் சுப்புராஜ், ராஜேந்திரன், செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai