Enable Javscript for better performance
புதுத்துறை அருகே தார்ச்சாலை: அலுவலர்களுடன் எம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    புதுத்துறை அருகே தார்ச்சாலை: அலுவலர்களுடன் எம்.எல்.ஏ. ஆய்வு

    By DIN  |   Published on : 18th May 2018 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுத்துறை அருகே சமத்துவபுரம் பகுதியில் தார்ச்சாலை அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறையினருடன் சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    காரைக்கால் தெற்குத் தொகுதிக்குள்பட்ட புதுத்துறை லயன்கரை, சமத்துவபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட எல்.ஜி.ஆர். பட்டா பயனாளிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 
    இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கருங்கல் பெயர்ந்து நடந்து செல்வதற்குக்கூட சிரமப்படும் நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
    எனவே, அங்கு தார்ச்சாலை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கும் வகையில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா அந்தப் பகுதிக்குச் சென்றார். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மகேஷ் உள்ளிட்ட பொறியாளர் குழுவினரும் அவருடன்
    சென்றிருந்தனர்.
    குடியிருப்புப் பகுதியில் உள்ள சுமார் 600 மீட்டர் சாலையின் தற்போதைய தரத்தை சட்டப் பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையினரும் நீண்ட நேரம் ஆய்வுசெய்தனர். அப்போது, இந்த சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்திடவும், இதற்கான பணியை வரும் பருவமழை காலத்துக்குள் நிறைவேற்றித் தருமாறும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
    ஆய்வு குறித்து சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா கூறும்போது, இந்த சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்தும் வகையில், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கான மதிப்பீட்டைப் பொதுப்பணித்துறையினர் தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பர். ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு, ஆறுகள் பராமரிப்புத் திட்டத்தின்கீழ், இந்தச் சாலையை மேம்படுத்துவது தொடர்பாக ஆட்சியாளர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai