வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து அரசியல் கட்சியினருடன் தேர்தல் துறையினர் ஆலோசனை

வாக்காளர் பட்டியில் வெளியீடு செய்வது தொடர்பாக கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் பட்டியில் வெளியீடு செய்வது தொடர்பாக கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2019 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 2019 -ஆம் ஆண்டுக்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அரசியல் கட்சியினரிடம் தெரிவிக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் துணை வாக்காளர் பதிவு அதிகாரி கே. ரேவதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்காக  செப். 1 -ஆம் தேதி முதல் அக். 30 -ஆம் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் தொடர்புடைய சந்தேகங்களுக்கு வாக்குச் சாவடிக்குச் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம். திருத்தம் இருந்தால், அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், செப். 1 -2019 அன்று 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்த்துக் கொள்ள அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கே. ரேவதி கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தேர்தல் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com