வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக் குழு தொடக்கம்

காரைக்கால் வேளாண் கல்லூரியில்  தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டு, தேர்தல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்கால் வேளாண் கல்லூரியில்  தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டு, தேர்தல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
கல்வி நிலையங்களில் தேர்தல் கல்விக் குழு தொடங்க வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலாகும். இதன்படி, காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை, மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை உள்ளடக்கி தேர்தல் கல்விக் குழுவை தொடங்கி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்ட ம், நெடுங்காடு பகுதியில் இயங்கிவரும் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தேர்தல் கல்விக் குழு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வி. கந்தசாமி தலைமை வகித்தார்.
திருநள்ளாறு வட்டாட்சியரும், உதவி தேர்தல் பதிவு அதிகாரியுமான ஜி. முத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்விக் குழுவை தொடங்கிவைத்தார்.
இளம் பருவத்தினரை உள்ளடக்கி தேர்தல் கல்விக் குழு தொடங்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் என்ற நிலையில், மாணவர்கள் அனைவரும் 18 வயது பூர்த்தியானவுடன் வாக்காளராக பதிவு செய்துகொள்ளவேண்டும் எனவும், தேர்தலின்போது வாக்குப் பதிவுக்கான நிலைகள் குறித்து அவர் விளக்கினார்.
மேலும், வாக்குச்சாவடிக்குச் செல்லும் முறை, வாக்குச் சாவடியில் உள்ள நிலைகள் குறித்தும் அவர் மாணவர்களுக்கு விளக்கினார்.
கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை படிப்பைச் சேர்ந்த கப்பல் படையின் தேசிய மாணவர் படையினர் மற்றும் 2 மற்றும் 3 -ஆம் ஆண்டு மாணவ,  மாணவியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு வாக்காளராகும் தகுதி மற்றும் அடுத்த செயல்பாடுகள் குறித்து ஆன்லைன் மூலமாகவும் விளக்கிக் கூறப்பட்டது.
கல்லூரி பேராசிரியரும், மாநில தேர்தல் கல்விக் குழு பயிற்சியாளருமான முனைவர் ஆர். மோகன், வாக்குப் பதிவின் முக்கியத்துவம், தேர்தல் விழிப்புணர்வு, வாக்காளர் இணையதள பதிவு முறை உள்ளிட்டவை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
கல்லூரி தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் கப்பல் படை என்.சி.சி. அதிகாரியுமான முனைவர் பி. பாண்டியன் வரவேற்றார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. ஜெயசிவராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com