அஞ்சல் துறை மூலம் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

காரைக்காலில் அஞ்சல் துறை மூலம் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணியை மாவட்டத் தேர்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்காலில் அஞ்சல் துறை மூலம் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணியை மாவட்டத் தேர்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
காரைக்கால் மாவட்டத் தேர்தல் துறை ஸ்வீப் என்ற விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு நிலையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அஞ்சல் துறை மூலம் கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குப் பதிவு இருந்த பகுதிகளில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் வழங்க மாவட்டத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்தார். அதன்படி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அஞ்சல் துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்த துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஏ. விக்ரந்த் ராஜா, நாகை அஞ்சல் கோட்ட  வணிக செயல் அலுவலர்  விஜயராகவனிடம் வழங்கினார். இந்த பிரசுரத்தில், உங்கள் வாக்கு ஒரு வலிமையான ஆயுதம், அதனை சரியாகப் பயன்படுத்துங்கள். நல்லாட்சியை உறுதி செய்திட தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்திடுங்கள். உங்கள் வாக்கு விலை மதிப்பற்றது. பணத்துக்கும், பொருளுக்கும் அதை ஒருபோதும் விற்காதீர்கள். வாக்குக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் சிந்தித்து, தவறாமல்,  கண்ணியத்துடன் அனைவரும் வாக்களியுங்கள் என்றும், ஜனநாயகம் வலிமை பெற 100 சதவீதம் வாக்களிப்போம், தவறாமல் 18-ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com