சுடச்சுட

  

  தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் பல்வேறு சங்கங்களில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விளம்பி தமிழாண்டு நிறைவு பெற்று, விகாரி தமிழ்ப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறந்ததையொட்டி, கோயில்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
   காரைக்கால் விஸ்வபிர்ம சங்கம் சார்பில் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி.சுப்பிரமணியன், ஏ.எம்.எச். நாஜிம், தெற்குத் தொகுதி காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி என்கிற அப்துல் காதர், சங்க நிர்வாகிகள் கே. தண்டாயுதபாணி பத்தர், மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  நிகழ்ச்சியில், விகாரி ஆண்டின் சிறப்புகள் குறித்து சிவாச்சாரியார்கள் விளக்கிக் கூறினர். இதில் பங்கேற்றோர் அனைவருக்கும் பஞ்சாங்கம் பிரதிகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai