Enable Javscript for better performance
தேர்தல் விளம்பரம் செய்வோர் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலுக்கு முதல் நாள் மற்றும் தேர்தல் நாளில் விளம்பரம் செய்ய உரிய அனுமதி பெறவேண்டும் எனத் தேர்தல் துறை கூறியுள்ளது.
    இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அமைப்பு, தனி நபர் யாரேனும் விளம்பரம் செய்யவேண்டுமெனில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெறாமல் தேர்தல் விளம்பரங்களை செய்யக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai