சுடச்சுட

  

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது புதுச்சேரி அபரிமிதமான வளர்ச்சிப் பெற்றது: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

  By DIN  |   Published on : 16th April 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது புதுச்சேரி அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது என்று வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.
  மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓயவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் கன்னிக் கோயில் தெரு, சாலியத் தெரு, அகலங்கண் பகுதியில் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட  அவர் செய்தியாளர்களிடம் கூறியது :
  கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், யூனியன் பிரதேசத்துக்குரிய சட்ட அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டபோதும் கூட , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டதால் புதுச்சேரி  யூனியன் பிரதேசம் அடிப்படை வசதிகள், மருத்துவம், கல்வி, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது. 
  அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், கேரளத்திலிருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாழும் உறவினர்களை காண வந்தோர், இங்குள்ள வசதிகளைப் பார்த்து, இங்கேயே தங்கி குடும்ப அட்டை பெற்றதையெல்லாம் கூறமுடியும். ஆனால், கடந்த 5 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் புதுச்சேரிக்கான நியாயமான நிதி வழங்கல், திட்ட உதவிகள் வழங்கலில் மாற்றாந்தாய் மனப்போக்கு பார்க்கப்பட்டுவிட்டது. இங்குள்ள சட்ட அதிகாரம் கொண்டோரும் மத்திய நிதி கிடைக்க முடியாமலும், திட்டங்கள் அமலாக்கத்தை முறையாக செய்ய முடியாமல் தடுத்துவருகின்றனர். நரேந்திரமோடி ஓர் இரவு நேரத்தில் தொலைக்காட்சி முன் தோன்றி பண மதிப்பிழப்பு அறிவிப்பை செய்தார். இதனால் திருமணம், மருத்துவம், கல்வி என பல தேவைகளுக்கு தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் பீதியுடன் தவிப்புக்குள்ளோனோமே அதையெல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
  நடக்கவுள்ளது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல, மக்களவைத் தேர்தல் என்பதை நினைவில் கொண்டு, புதுச்சேரி மாநிலம் அமைதியான, வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் செல்லக்கூடிய சூழல் உருவாக மத்தியில் காங்கிரஸ் அரசு அமையவேண்டும். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறவேண்டும் என்பதை வாக்காளர்கள் பல்வேறு விவகாரங்களை சீர்தூக்கிப் பார்த்து ஆதரிக்கவேண்டும். காரைக்காலை பொருத்தவரை காங்கிரஸுக்கு அதிகப்பட்ச வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார் அமைச்சர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai