சுடச்சுட

  

  காரைக்காலில் 3,500 பேருக்கு வாக்காளர் விழிப்புணர்வு கடிதம் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
  காரைக்கால் மாவட்டத் தேர்தல் துறை, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்வீப் அமைப்பு இணைந்து மக்களவைத் தேர்தலில் காரைக்காலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு கருத்துகளுடன் கடிதம் தயார் செய்யப்பட்டது.
  கடந்த தேர்தல்களில் குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்த பகுதிகளைத் தேர்வு செய்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
  காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையத்தில் மாவட்ட  துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ் கலந்துகொண்டு கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டார். 
  இந்த நிகழ்வில்  அஞ்சல் நிலைய தலைமை அதிகாரி நாகராஜ், ஸ்வீப் நோடல் அதிகாரி வி.லட்சுமணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  காரைக்காலில் உள்ள வாக்காளர்கள் 3,500 பேருக்கு, தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பேன் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமான கருத்துகளுடன் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஸ்வீப் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai