சுடச்சுட

  


  காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் ஏப்ரல் 20-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை உள்வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், ஏப்ரல் 20-ஆம் தேதி நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai