சுடச்சுட

  


  தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்திருக்கும் துணை ராணுவப் படையினர் திருநள்ளாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 
  மக்களவைத் தேர்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 164 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு நிலையில் உள்ள காவலர்கள் 250 பேர் ஈடுபடுவர் என ஏற்கெனவே காவல் துறை தெரிவித்தது. பொதுவாக தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைப்பது வழக்கம். 
  இந்நிலையில், கடந்த மாத இறுதியில் காரைக்கால் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு தமிழக அதிரடிப் படை காவலர்கள் 50 பேர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக ஆந்திர மாநிலத் தேர்தல் பணியில் இருந்த துணை ராணுவப் படையினர் 146 பேர் திங்கள்கிழமை காரைக்கால் வந்தனர். காரைக்கால் வந்த துணை ராணுவப் படையினர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் குழுவாக பிரிந்து செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். திருநள்ளாறில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர்  வீரவல்லவன் தலைமையில் புதுச்சேரி மாநில காவல் துறையினர் உள்ளிட்ட துணை ராணுவப் படையினர், நகரப் பகுதி மற்றும் முக்கியத் தெருக்களில் அணிவகுப்பு நடத்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai