சுடச்சுட

  

  காரைக்கால் மாவட்டத்தில், இதுவரை ரூ. 9 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறை மற்றும் கலால் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில், எல்லைப் பகுதி மட்டுமின்றி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகாரின்பேரில் தொடர்புடைய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் ஏதேனும் விநியோகிக்கப்படுகிறதா எனவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில், காவல் துறை சார்பில் ஏப்ரல் 16-ஆம் தேதி அம்பகரத்தூரில் நடத்திய சோதனையில் ரூ. 4.56 லட்சம் மதிப்புள்ள சாராயம் கைப்பற்றப்பட்டது. இது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து காவல் துறையினர், கலால் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நாளில் இருந்து இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் ரூ. 9,03,376 லட்சம் மதிப்புடைய 7,205 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுசம்பந்தமாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai