கைலாசநாதர் கோயிலில் இன்று துர்கா மகா யாக பூஜை

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் துர்கா மகா யாகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது.


காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் துர்கா மகா யாகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது.
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மகாலட்சுமி, மகா சரஸ்வதி,  துர்கா மகா யாகம் நடத்தப்படுகிறது. புனிதவதியார் வழிபாட்டு மன்றம் சார்பில், நிகழாண்டு 35-ஆம் ஆண்டாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நான்கு நாள்கள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை கணபதி ஹோமம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. பகல் 12 மணியளவில் மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை  6 மணிக்கு மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்கா பூஜைகள் செய்யப்பட்டு கடம் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு துர்கா ஹோமம் தொடங்குகிறது. பகல் 1 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு கோயிலில் அம்பாள்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது. சனிக்கிழமை காலை 9 மணிக்கு பால்குடமெடுத்தலும், அம்பாளுக்கு தயிர் பாவாடை வழிபாடும் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. மே 3-ஆம் தேதி விடையாற்றியுடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com