அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்:   மீனவர்கள் கோரிக்கை

விசைப்படகுகள் கடலுக்கு சிரமமின்றி சென்று திரும்பிவர ஏதுவாக அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசைப்படகுகள் கடலுக்கு சிரமமின்றி சென்று திரும்பிவர ஏதுவாக அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்காலில் அரசலாறு - முல்லையாறு இணையுமிடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைந்திருக்கிறது. இந்த துறைமுகத்தில் ஏறக்குறைய 250 விசைப்படகுகள் நிறுத்தப்படுகின்றன. அரசலாறு கடலில் கலக்கும் பகுதியில் இருபுறமும் கருங்கல் கொட்டப்பட்டு, முகத்துவாரம் ஏற்படுத்தப்பட்டது. இதன் வழியேதான் படகுகள் கடலுக்குச் சென்று திரும்பவேண்டும்.
முகத்துவாரப் பகுதியில் மணல் சூழ்ந்து படகுகளை இயக்க சிரமப்படுவதாக மீனவர்களிடையே வேதனை தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, காரைக்கால் விசைப்படகு உரிமையாளர்கள் கூறியது:
மரத்தாலான விசைப்படகுகள் பலவும் இரும்பு படகுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றின் நீளம், உயரம் பழைமையான விசைப்படகுகளைக் காட்டிலும் மாறுபட்டதாகும். முகத்துவாரம் படகுகள் இயக்கிச் செல்லும் வகையில் ஆழமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். பொதுப்பணித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முகத்துவாரம் தூர்வாரப்படுவது ஏற்கெனவே வழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பணி மேற்கொள்ளப்படவில்லை. கடல் பகுதியிலிருந்து மணல் அடித்துவரப்பட்டு முகத்துவாரத்தில் குவிகிறது. அரசலாற்றின் தென்கரையிலிருந்து மணல் சரிவு ஏற்பட்டு முகத்துவாரத்தை அடைக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக  படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை மூலம் முகத்துவாரத்தை டிரெட்ஜிங் இயந்திரம் வைத்து தூர்வாருவதற்கு புதுச்சேரி அரசு உரிய ஏற்பாட்டை  செய்யவேண்டும். காரைக்கால் துறைமுகம் கப்பல் வரத்துக்காக அவ்வப்போது டிரெட்ஜிங் செய்து வருகிறது. இதன் உதவியை பெற்றாவது உடனடியாக மீன்பிடித்துறைமுகப் பகுதியில் தூர்வாரலை புதுச்சேரி அரசு மேற்கொள்ள
வேண்டும்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறையினர், மீன்வளத்துறையினர் ஆகியோர் இந்த பகுதியை பார்வையிட்டு, மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com