காரைக்காலில் சட்ட நூல் வெளியீடு

காரைக்காலில் "தெரிந்ததும், தெரியாததும்' எனும் தலைப்பிலான சட்ட நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

காரைக்காலில் "தெரிந்ததும், தெரியாததும்' எனும் தலைப்பிலான சட்ட நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நூலாசிரியர் குமர.ராசப்பா எழுதிய "தெரிந்ததும், தெரியாததும்' என்கிற தொகுதி -3 சட்ட நூல் வெளியீட்டு விழா காரைக்கால் அம்மையார் கலையரங்கில் நடைபெற்றது. பணி ஓய்வுபெற்ற பிரெஞ்சு பேராசிரியர் கு.தெய்வசிகாமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நூலை வெளியிட, காரைக்கால் மண்ட காவல் கண்காணிப்பாளர்கள் டி.மாரிமுத்து, எல்.வீரவல்லபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பேராசிரியை சா.நசீமாபானு நூல் மதிப்பீடு செய்து உரையாற்றினார். சட்டம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம் எனவும், அனைவரும் எளிய தமிழ் நடையில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் த. செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே. கல்லூரி முதல்வர் பி.எஸ். ராஜேந்திரன், காரைக்கால் வேளாண் கல்லூரி பேராசிரியர் குமார. ரத்தினசபாபதி, நடேச. வைத்தியநாதன், காரைசுப்பையா, முன்னாள் தலைமையாசிரியர் நாகராஜன், பேராசிரியர் மு. சாயபுமரைக்காயர் ஆகியோர் நூல் குறித்து பல்வேறு தகவல்களைக்கூறி, நூலாசிரியரைப் பாராட்டிப் பேசினர்.
நூலாசிரியர் குமர.ராசப்பா  ஏற்புரையாற்றினார். பணி ஓய்வுபெற்ற அலுவலக கண்காணிப்பாளர் கே. ராஜமாணிக்கம் வரவேற்றுப் பேசினார். ஓவியர்  கே.ஜெய்சங்கர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசுத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com