குளங்கள் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திருமலைராயன்பட்டினத்தில் குளங்கள் தூர்வாரப்படும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் ஆய்வு செய்து,

திருமலைராயன்பட்டினத்தில் குளங்கள் தூர்வாரப்படும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் ஆய்வு செய்து, காவிரித் தண்ணீர் வரும் முன்பாக பணிகளை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 100 குளங்கள் தூர்வாரும் இலக்கில், அரசுத்துறையினர், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்களிப்பில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை நிர்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் இப்பணியை செய்துவருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் அடுத்த 10 நாள்களில் காரைக்கால் பகுதிக்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமலைராயன்பட்டினத்தில் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்றிருக்கும் குளங்களில், தூர்வாரும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதா ஆனந்தன் ஆய்வுசெய்தார். பி.பி.சி.எல். அருகே உள்ள பால்குளம், கருடப்பாளையத் தெரு கோட்ராக் குளம், வெள்ளாந்தெருவில் உள்ள கண்ணாயிரம் குளம், எடத்தெருவில் உள்ள ஆத்தாக்குளம், சாணிப்பறவைக் குளம் ஆகியவற்றை பேரவை உறுப்பினர் பார்வையிட்ட அவர், திட்டமிட்டப்படி 3 குளங்கள் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
குளங்களில் தண்ணீர் வரும் வழி, வெளியேறும் வழிகளை முறைப்படுத்துமாறும், காவிரித் தண்ணீர் காரைக்கால் எல்லைக்குள் வரும் முன்பாக குளங்களைத் தூர்வாரி முடித்திட சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் எனவும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், குளங்களில் கழிவுகள் கலக்காமல், தண்ணீரை சேமித்து வைத்து பாதுகாக்குமாறு அப்பகுதி மக்களிடம் பேரவை உறுப்பினர் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வீரசெல்வம், பொறியாளர் குழுவினர்
 உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com