சுதந்திர தினம்: அரசுப் பள்ளியில் மாணவர்களின் கவியரங்கம்

பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கவிரயரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கவிரயரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு கொம்யூன், பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளியில் சிறுவர் இலக்கிய அமைப்பு உள்ளது. இதன்மூலம் சுதந்திர தினத்தையொட்டி, மாணவ, மாணவியர் பங்கேற்புடன் சிறப்பு கவிரயரங்கம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
இதற்காக ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து, பள்ளி நிர்வாகத்தால் உரிய தலைப்பு கொடுக்கப்பட்டு தகவல்களை தொகுத்து வர அறிவுறுத்தப்பட்டன.
பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் இதில் பங்கேற்றனர். வாழ்க்கைக்குத் தேவை அறிவா, பண்பா எனும் தலைப்பில் மாணவர்கள் தகவல்களை கவிதை வடிவில் படித்தனர். அறிவு தலைப்பில் தலா ஒரு மாணவ, மாணவி, பண்பு தலைப்பில் தலா ஒரு மாணவ மாணவி, நடுவராக ஒரு மாணவி இருந்தனர். அறிவு பிரிவில் அப்துல் கலாமை முன் மாதிரியாக வைத்தும், பண்பு பிரிவில் அவ்வையார், திருவள்ளுவரை முன் மாதிரியாக வைத்து கவிதை வாசித்தனர். இரு பிரிவுகள் சார்பில் மாணவ மாணவியர் ஒட்டுமொத்தமாக 15 நிமிடம் வரை கவிதை வாசித்தனர். நிறைவில் நடுவர் தீர்ப்பளிக்கும்போது, அறிவும், பண்பும் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என கூறி, இவ்விரு பிரிவுகளிலும் சிறப்பாக கருத்துகள் சிலவற்றை மேற்கோள்காட்டி நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இதுகுறித்து, பள்ளி பொறுப்பாசிரியர் மா. செல்வராஜ் கூறியது: 
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் பயில்கின்றனர். மாணவர்களுக்கு பாடப் புத்தகம்  அல்லாது பரவலான அறிவு வளரும் விதத்தில், பல்வேறு விதமான திறன் சார்ந்த போட்டிகள் மற்றும் திறனை வெளிப்படுத்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
பள்ளியின் அனைத்து வகுப்பிலும், அனைத்து மாணவர்களும்  திறனை செம்மையாக வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. இதனடிப்படையில் கவியரங்க நிகழ்ச்சியை மாணவ மாணவியர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடத்தி, அனைவரின் பாராட்டைப் பெற்றனர். இதன்மூலம் பேச்சாற்றல், அறிவாளிகள் மத்தியில் அச்சமின்றி பேசும்திறன் போன்ற ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என  நம்புகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com