Enable Javscript for better performance
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனை

    By DIN  |   Published on : 24th August 2019 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
    காரைக்கால் பகுதி அக்கரைவட்டத்தைச்  சேர்ந்தவர் ஒரு பெண் சர்க்கரை நேயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு துணையாக இவரது 15 வயது மகள் இருந்துள்ளார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த  எபி (எ) எபிநேசர் (24) அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக்க கூறி, நிரவி அக்கரைவட்டம் செல்லும் சாலையில் மறைவான இடத்துக்கு அவரை அழைத்து சென்று எபிநேசர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.   இதுகுறித்து நிரவி போலீஸார் வழக்குப்பதிந்து, எபிநேசரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இருதரப்பு வாதங்கள், சாட்சியங்கள் விசாரணை நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை  தீர்ப்பு வழங்கப்பட்டது. செசன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், குற்றவாளியான எபிநேசருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai