Enable Javscript for better performance
மின் நுகர்வோர் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    மின் கட்டணத்தை செலுத்த தவறியவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மின்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. எனவே, மின் கட்டண நிலுவை வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பைத் தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 9 முதல் 1 மணி வரை சிறப்பு மின் கட்டண வசூல் மையம் செயல்படும். மின் நுகர்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கட்டணத்தை செலுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai