காரைக்கால் அம்மையார்  அவதார சிறப்பு வழிபாடு

காரைக்கால் அம்மையார் கோயிலில் அவதார சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார் கோயிலில் அவதார சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாரின் ஐக்கிய நிகழ்ச்சி பங்குனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் விமரிசையாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வகையில், அம்மையார் அவதரித்த ஆவணி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தைக் கொண்டாடும் விதமாக, கோயில் நிர்வாகம் காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாள் விழா வெள்ளிக்கிழமை நடத்தியது.
முன்னதாக காலை நிகழ்வாக,  அம்மையார் கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி அணிவித்து, ஆராதனை நடைபெற்றது. மதியம்  சிறப்பு முறையில் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னம் பாலிப்பில் பங்கேற்றனர். மாலை நிகழ்வாக,  பரதநாட்டியம், பக்தி இசை நிகழ்ச்சிகளும் அம்மையார் மணிமண்படத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில் அறங்காவல் வாரியத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com