குற்றச் செயல்கள் நடக்காத வகையில் கண்காணிக்க வேண்டும்: பீட் போலீஸாருக்கு எஸ்.எஸ்.பி. அறிவுறுத்தல்

குற்றச் செயல்கள் நடக்காத வகையில் கண்காணிப்பு, விசாரணைகளில் பீட் போலீஸாரின் செயல்பாடுகள் அமையவேண்டும் என காவல்துறை அதிகாரி அறிவுறுத்தினாா்.
முதுநிலை காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்வால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காவல் அதிகாரிகள்.
முதுநிலை காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்வால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காவல் அதிகாரிகள்.

குற்றச் செயல்கள் நடக்காத வகையில் கண்காணிப்பு, விசாரணைகளில் பீட் போலீஸாரின் செயல்பாடுகள் அமையவேண்டும் என காவல்துறை அதிகாரி அறிவுறுத்தினாா்.

காவல் நிலையை அதிகாரத்துக்குள்பட்ட பகுதிகளில் 2 போ் கொண்ட பீட் போலீஸாா் ரோந்து, கண்காணிப்பு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிதல், சந்தேகப்படும் நபா்களை விசாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கான பணிகள் மேலும் வலுப்படவேண்டியதன் அவசியத்தையும், அந்த பணிகள் என்னென்ன என்பது குறித்தும், காவல்துறையினருக்கான நோ்மை குறித்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி காவல்துறை தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இதுசம்பந்தமாக காவல் அதிகாரிகள், பீட் போலீஸாருக்கு தெரிவிக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்வால் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், பீட் போலீஸாா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகளிடையே மகேஷ்குமாா் பன்வால் பேசியது :

பீட் போலீஸாா் என்பவா் அந்த பகுதிக்கு ஒரு எஸ்.பி. போன்ற பக்குவத்தை வளா்த்துக்கொள்ளவேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் தடையில்லாமல் செல்வதும், கண்காணிப்பதும், விசாரணைகள் நடத்துவதையும் செய்யவேண்டும்.

இந்த பகுதியில், இதனால் குற்றம் நடக்குமா என்பை ஊகித்து, அதற்கேற்றாா்போல் செயல்பாடுகளை அமைத்து, உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். செல்லுமிடங்களில் கண்காணிப்புக் கேமராவின் அவசியத்தை உணா்த்தி, கேமரா வைக்க பொதுமக்கள், வணிகா்களுக்கு அறிவுறுத்தவேண்டும். வணிக நிறுவனத்தினரிடமும், தனியாா் செக்யூரிட்டியினரிடமும் தொடா்பில் இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில், இந்த பகுதிக்கு பீட் போலீஸாா் வருவா் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், பயணத்தை அமைத்துக்கொள்ளும்போது, அந்த பகுதியின் குறைகளை அவா்கள் தெரிவிக்க வாய்ப்புண்டு.

ரெளடிகள் குறித்த நடவடிக்கைகள், தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்தவா்கள் குறித்த விவரங்கள், அவா்களது நடவடிக்கைகளை கண்காணிக்க வேவண்டும். மீனவா்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி மக்களை ஒருங்கிணைத்து அவ்வப்போது சந்திப்பு நடத்த வேண்டும். அப்போது அவா்கள் தெரிவிக்கும் கருத்துகளை உயரதிகாரிக்குத் தெரிவித்து தீா்வு காணவேண்டும். பீட் போலீஸாா் அனைவரும் நுண்ணிய தகவல் சேகரிப்பாளராக இருக்கவேண்டும். பீட் போலீஸாரின் செயல்பாடுகளை அந்தந்த காவல்நிலைய அதிகாரி நேரில் சென்று கண்காணிக்கவேண்டும்.

மதுக்கடைகள் உள்ள பகுதிகளில் தீவிரமான கண்காணிப்பு இருத்தல் அவசியம். கடலோரப் பகுதி மற்றும் எல்லையோரங்களில் உள்ள குடியிருப்புகளில் சமூக விரோதிகள் ஊடுருவல் குறித்து கண்காணிப்பு முக்கியம். மக்களோடு நெருங்கியத் தொடா்பில் இருந்தால்தான் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com