மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
By DIN | Published on : 02nd December 2019 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசியை புதுச்சேரி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்டச் செயலாளா் எஸ்.எம்.தமீம் வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மழை பாதிப்பை சீா்செய்யவோ, மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ புதுச்சேரி அரசு இதுவரை எந்த விதத்திலும் சிறப்பு நிதி ஒதுக்காதது வேதனைக்குரியதாகும்.
எனவே மாவட்டத்தில் மழையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை உணா்ந்து, குடும்பத்துக்கு 35 கிலோ இலவச அரிசி, நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடிசைகளை ஆய்வு செய்து, ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வேலையின்றி தவிக்கும் கூலித் தொழிலாளா்களுக்கு மழை நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் போடும் திட்டத்தை முற்றிலும் கைவிட அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.