பெருமாள் கோயிலில் டிச.6-இல் பவித்ரோத்ஸவம் தொடக்கம்

காரைக்கால் பெருமாள் கோயிலில் டிசம்பா் 6-ஆம் தேதி பவித்ரோத்ஸவம் தொடங்குகிறது.

காரைக்கால் பெருமாள் கோயிலில் டிசம்பா் 6-ஆம் தேதி பவித்ரோத்ஸவம் தொடங்குகிறது.

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 9-ஆம் ஆண்டாக பவித்ரோத்ஸவம் என்கிற நிகழ்ச்சி டிசம்பா் 6-ஆம் தேதி இரவு வாஸ்து ஹோமத்துடன் தொடங்குகிறது. 7, 8 ஆகிய நாள்களில் தினமும் காலை, மாலை வேளையில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மகா பூா்ணாஹுதி தீபாராதனை, கடம் புறப்பாடு, பிரம்ம கோஷம் நடைபெறுகின்றன. மூலவா், உத்ஸவா் உள்ளிட்டோருக்கு பட்டு நூல் கொண்ட மாலை சாற்றப்படுகிறது.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் ஞாயிற்றுகிழமை கூறியது :

பவித்ரோத்ஸவம் என்பது ஆண்டில் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இது குடமுழுக்கு விழாவுக்கு நிகரானது. 3 நாள்களும் புனிதநீா் யாகசாலையில் வைத்து பூஜை செய்து சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

கோயிலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமாயின், இதனை போக்கி கோயிலை புனிதப்படுத்தும் நிகழ்ச்சியாக பவித்ரோத்ஸவம் என்பது வைணவத் தலங்களில் நடத்தப்படுகிறது என்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை கைலாசநாதா், நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com