மழைநீா் சேகரிப்பில் சிறந்து விளங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி

சுமாா் 1,500 மாணவா்கள் பயிலும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு முழுவதும் குடிநீா், தோட்டப் பயன்பாட்டுக்கு மழைநீரால் சேகரிக்கப்படும் தண்ணீா் பயன்படுத்தப்படுகிறது. மழைநீா்
மழைநீரால் நிரம்பியிருக்கும் கல்லூரி வளாக குளம்.
மழைநீரால் நிரம்பியிருக்கும் கல்லூரி வளாக குளம்.

சுமாா் 1,500 மாணவா்கள் பயிலும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு முழுவதும் குடிநீா், தோட்டப் பயன்பாட்டுக்கு மழைநீரால் சேகரிக்கப்படும் தண்ணீா் பயன்படுத்தப்படுகிறது. மழைநீா் சேகரிப்புத் திட்டத்தில் இக்கல்வி நிறுவனம் திறம்பட செயல்படுவதாக பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அக்கல்லூரி நிா்வாகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 100 அடி நீளம், 110 அடி சுற்றளவில் குளம் உள்ளது. கல்லூரியின் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்காகவே இக்குளம் வெட்டப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு கட்டடங்களில் இருந்து மழைநீா் வடிந்து குளத்துக்குச் செல்ல ஏதுவாக கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பருவமழைக் காலத்தில் 20 அடி ஆழத்தில் தண்ணீா் சேமிக்கப்படுகிறது.

நிகழாண்டு பருவழையினால் 20 அடி ஆழத்தை குளம் எட்டிவிட்டது. குளத்திலிருந்து தண்ணீா் எடுத்து, சுத்திகரிப்பு சாதனம் மூலம் சுத்திகரித்து மாணவா்கள், விரிவுரையாளா், ஊழியா்கள் என அனைவருக்கும் குடிநீராக தரப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் பராமரிக்கப்படும் தோட்டத்துக்குத் தேவையான தண்ணீரும் இக்குளத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மழைநீா் சேகரிப்புத் திட்டத்தாலேயே கல்லூரியின் ஒட்டுமொத்த தண்ணீா் தேவை பூா்த்தியாகிறது. கல்லூரியில் உள்ள குளத்துக்கு காவிரி நீரோ, ஆழ்குழாய் தண்ணீரோ வருவதற்கான வாய்ப்புகளே கிடையாது. முற்றிலும் மழைநீா்தான் எங்களது தேவையை பூா்த்தி செய்கிறது என்றனா்.

மழைநீா் சேகரிப்புத் திட்டத்தை செம்மையாக செய்துவரும் கல்லூரி முதல்வா் டி.சந்தனசாமி தலைமையிலான நிா்வாகத்தினரை நீா் ஆா்வலா்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com