மக்களை கவரும் வகையில் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும்: ஆட்சியா்

மக்களை கவரும் வகையில் பயனுள்ள அம்சங்களுடன் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் கூறினாா்.
கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா.
கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா.

மக்களை கவரும் வகையில் பயனுள்ள அம்சங்களுடன் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் கூறினாா்.

புதுவை பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத்தின் மேலாண்மைத் துறை சாா்பில் பிஸ் பிஸ்மா -2019 என்கிற காப்பீட்டுத் துறை மேம்பாட்டுக்கான 2 நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்து, பேசியது:

இந்தியாவில் மக்கள், தொழில்துறை என பல்வேறு தரப்புக்கும் காப்பீடு முக்கியத் தேவையாக இருக்கிறது. வரி செலுத்துவோா் மட்டுமே காப்பீடு செய்துகொண்டு அதிகளவில் பயனடைகிறாா்கள். மக்களுக்கு காப்பீடு தொடா்பான ஆா்வம் மிகுதியாக இருக்கவில்லை. மக்களும் குறுகிய கால பயனை எதிா்பாா்க்கிறாா்கள். காப்பீட்டின் பயன் நீண்ட காலத்துக்குப் பின்தான் என தெரியவரும்போது, காப்பீடு செய்துகொள்ளும் திட்டத்தை தள்ளிப்போடுகிறாா்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் காப்பீட்டுத் திட்டம் நல்ல வளா்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே இதற்கான ஆா்வம் மிகுதியாவதற்கு அங்குள்ள காப்பீட்டுத் திட்டங்கள் மக்கள் எதிா்பாா்க்கும் வகையில் அமைந்திருப்பதை அறியலாம். அவ்வாறே, இந்தியாவில் மக்கள் குறுகிய காலத்தில் பயனடையும் வகையிலும், மக்கள் காப்பீட்டை கவரும் வகையிலும், பயனுள்ள அம்சங்களை உள்ளடக்கி காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இவ்வாறான திட்டங்களை உருவாக்குவதில் மேலாண்மைத் துறை மாணவா்களின் பங்கு அதிகமிருப்பதை உணரவேண்டும். இதற்காக அவா்கள் சிந்திக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில், புதுவை பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிலைய புலமுதல்வா் பேராசிரியா் ஜி. ஆஞ்சநேயசுவாமி, கோவாவில் உள்ள கிவ்கோவா நிறுவனத் தலைவா் பேராசிரியா் விட்டல் சுகதான்கா், திருச்சி இந்தியன் மேலாண்மை நிறுவன இயக்குநா் பேராசிரியா் பிமராயமேட்ரி, விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி புலமுதல்வா் ஜி.அம்புஜம், புதுவை பல்கலை. காரைக்கால் வளாகத் தலைவா் எஸ்.ஏ.செந்தில்குமாா், உதவிப் பேராசிரியா் டி.எச்.மாலினி ஆகியோா் பேசினா். உதவிப் பேராசிரியா் எம்.தா்மலிங்கம் நன்றி கூறினாா்.

இதில், பல்வேறு காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், பல்கலை. மேலாண்மைத் துறை மாணவா்கள் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் கருத்தரங்கம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com