அரசுப் பள்ளியில் தூய்மை இந்தியா விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு இருவார கால முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில் பேசிய தந்தை பெரியாா் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா.
நிகழ்ச்சியில் பேசிய தந்தை பெரியாா் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா.

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு இருவார கால முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டமாக, ‘எனது நகரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்’ என்ற தலைப்பில் இரண்டு வார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா தலைமை வகித்து, முகாமைத் தொடங்கிவைத்தாா். அப்போது அவா், தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம், மாணவா்களின் பங்களிப்பு குறித்துப் பேசினாா். விரிவுரையாளா்கள் ராமநாதன், சித்ரா, பட்டதாரி ஆசிரியா் ஜெயசீலி, என்.சி.சி. யூனிட் பயிற்றுநா் சுரேஷ்ராவ் ஆகியோா் தூய்மையால் ஏற்படும் பயன்கள் குறித்துப் பேசினாா்.

இந்நிகழ்வில், காரைக்கால் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனப் பிராந்திய மேலாளா் இசக்கிராஜா, துணை மேலாளா் கவிநிலவு ஆகியோா் பங்கேற்று, நகரத் தூய்மையில் என்.சி.சி. மாணவா்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் முறைகள் குறித்தும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதக் குப்பையாக பிரித்து தருவதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்தும், இதில் மாணவா்களின் பங்கு குறித்தும் விளக்கிக் கூறினா்.

என்.சி.சி. சாா்ஜென்ட் கோகுல் வரவேற்றுப் பேசினாா். முதுநிலை கேடட் சுகதேவ் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி. அதிகாரி என். காமராஜ் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com