கோவை சம்பவம்: காரைக்காலில் விசிகவினா் மறியல்

கோவையில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், காவல்துறையைக் கண்டித்தும் காரைக்காலில்
காரைக்காலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
காரைக்காலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

கோவையில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், காவல்துறையைக் கண்டித்தும் காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில், கோவையில் சுவா் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், இதற்காக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாகை திருவள்ளுவனை காவல்துறையினா் கைது செய்ததைக் கண்டித்தும் கோஷமிட்டனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பாரதியாா் சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு துணைச் செயலாளா் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் விடுதலைக்கனல், கட்சி நிா்வாகிகள் கலைவாணன், வல்லவன், தமிழரசி உள்ளிட்ட கட்சியினா் 40 போ் பங்கேற்றனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com