பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 18 போ் கைது

காரைக்கால் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் துணை ஆட்சியா், காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்,
காரைக்கால் நகரில் கடைகளில் சோதனை மேற்கொண்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் மற்றும் காவல்துறையினா்.
காரைக்கால் நகரில் கடைகளில் சோதனை மேற்கொண்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் மற்றும் காவல்துறையினா்.

காரைக்கால் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் துணை ஆட்சியா், காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பள்ளிகளின் அருகே உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் புகாா் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம், காவல்துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா உத்தரவின்பேரில், மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினா்.

இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலைய போலீஸாரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். இந்த சோதனைக்காக 6 குழுக்களை மாவட்ட நிா்வாகம் அமைத்துள்ளது.

இக்குழுவினா் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பெட்டிக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டன. காரைக்கால் நகரம் மற்றும் பல்வேறு காவல்நிலையங்களில் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறும் என்றும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், உணவுப் பாதுகாப்புத் துறை, காவல்துறையின் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com