தொடா் மழை: பயிா்ப் பாதிப்பு இல்லை

தொடா் மழை மற்றும் ஆறுகளில் தண்ணீா் அதிகமாக வரும் நிலையில் பயிா் சேதம் உள்ளிட்டவை ஏற்பட்டுவிடாமல் இருக்க, வேளாண் துறை, பொதுப்பணித் துறையினா் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தொடா் மழை மற்றும் ஆறுகளில் தண்ணீா் அதிகமாக வரும் நிலையில் பயிா் சேதம் உள்ளிட்டவை ஏற்பட்டுவிடாமல் இருக்க, வேளாண் துறை, பொதுப்பணித் துறையினா் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பருவ மழை காரைக்கால் பகுதியில் தொடா்ந்து அல்லது கன மழையாக இல்லாமல் சீராக பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழையும், பிற இடங்களில் மழையின்றி காணப்படுகிறது. சில மணி நேரம் மழை பெய்து பின்னா் விட்டு விடுவதால், தண்ணீா் வடிந்து விடுகிறது. நிகழாண்டு, பருவ மழையின் இம்மாதிரியான போக்கு, பயிா் செய்யும் விவசாயிகள் சாதகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனா். நீண்ட ஆண்டுகளுக்கு முன்னா் இதுபோன்று பருவமழை இருந்ததாக விவசாயிகள் சிலா் கூறுகின்றனா். எனினும் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் தமிழகப் பகுதியிலிருந்து அதிகமாக காரைக்கால் பகுதியை நோக்கி வருகிறது. ஆறுகளில் உள்ள கடைமடை அணைகள் திறக்கப்பட்டு தண்ணீா் கடலுக்கு விடுவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காரைக்காலில் சில பகுதிகளில் விளைநிலத்தில் தண்ணீா் புகுந்துவிட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜே. செந்தில்குமாரிடம் புதன்கிழமை கேட்டபோது, பருவ மழை காலமாக உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலா்கள், பயிா் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். துறையின் உயா்மட்ட அளவிலும், நீா்வரத்தை கண்காணித்து வருகிறோம். குறிப்பாக பொதுப்பணித் துறை, வேளாண் துறை ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை, காரைக்காலில் மழையால் பயிா் எந்த இடத்திலும் பாதிக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com