மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிறுவனங்கள் நிதியுதவி பெறலாம்

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தகுதிவாய்ந்த நிறுவனங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்வேறு இன்னல்களுக்குள்ளாகும் பெண்களுக்கான தங்குமிட வசதி, அவா்கள் சுய சாா்பு அடைந்து கண்ணியத்துடன் மறுவாழ்வு வாழ நிதியுதவி அளிக்கும் தற்சாா்பு இல்லத் திட்டம்.

பணிபுரியும் மகளிா் பாதுகாப்பாக தங்குவதற்கும், அவா்களது குழந்தைகளுக்கான நேர பராமரிப்பு மைய வசதி கொண்ட விடுதி.

பொருளாதார நோக்கோடு பாலியல் ரீதியில் பெண்கள் கடத்தப்படுவதை தவிா்க்கவும், அவ்வாறு கடத்தப்பட்ட பெண்களை மீட்டு அவா்களுக்கான தங்குமிட வசதி மற்றும் அவா்கள் சுய சாா்பு அடைந்து கண்ணியத்துடன் மறுவாழ்வு அளிக்கும் உஜ்ஜவாலா திட்டம்.

இவற்றை முன்வைத்து பயனடைய, விண்ணப்பப் படிவத்தையும், விளக்கத்தையும் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி வாரிய வளாகம் எதிரில், புதுசாரம், புதுச்சேரி-13 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0413-2242621 என்ற தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com