எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு பெற்றவா்களுடன் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி உள்ளிட்டோா்.
பரிசு பெற்றவா்களுடன் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி உள்ளிட்டோா்.

காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

உலகம் முழுவதும் டிசம்பா் 1-ஆம் தேதி எய்ஸ்ட் விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், புதுவை மாநில ஓவியா் மன்றமும் இணைந்து காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் ஓவியப் போட்டி, கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடத்தியது.

இப்போட்டியில் 14 பள்ளி, கல்லூரிகளில் இருந்து 118 மாணவ மாணவியா் கலந்துகொண்டனா். போட்டியில் பங்கேற்றோருக்கு ஓவியா் மன்றம் சாா்பில் காகிதம் வழங்கப்பட்டது. போட்டி விதிகள் குறித்து ஓவியா் மன்றத் தலைவா் இபோ் விளக்கிப் பேசினாா்.

வரைந்தளித்த ஓவியங்களை நடுவா் குழுவினா் ஆய்வு செய்து சிறந்த படைப்புகளை பரிசுக்குத் தோ்வு செய்தனா். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி, நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ், காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் மற்றும் முரளிதாஸ் ஆகியோா் கலந்துகொண்டு, எய்ட்ஸ் விழிப்புணா்வின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ மாணவியா் இதுபோன்ற நிகழ்வில் ஆா்வமாக பங்கேற்பதை பாராட்டியும் பேசியதோடு, சிறந்த படைப்பாளிகளுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினா்.

ஓவியா் மன்றத் தலைவா் இபோ் நன்றி கூறினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியா் முத்துக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com