சுடச்சுட

  

  காக்கமொழி கோயிலில் இன்று ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு

  By DIN  |   Published on : 13th February 2019 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் அருகே உள்ள ஸ்ரீ கார்கோடகபுரீசுவரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு புதன்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.
  காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கார்கோடகபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புதுச்சேரி அரசின் நிதியுதவி உள்ளிட்ட நன்கொடைகள் மூலம் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
  கார்கோடகன் என்ற கொடிய விஷப் பாம்பு, இக்கோயில் சிவலிங்கத்தை வழிபாடு செய்து மோட்சம் அடைந்ததாகவும், நளச்சக்கரவர்த்தி  பல சிவாலயங்கள் சென்று தரிசித்து வந்த நிலையில், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபாடு செய்த பின்னர் திருநள்ளாறு சென்றதாகக் கூறப்படுகிறது. பாம்பு விமோசனம் அடைந்த தலம் என்பதால் இது ராகு - கேது தோஷ நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
  பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா, பக்தர்களுக்கு பரிகாரம் செய்யும் வழிபாடாக புதன்கிழமை மேற்கொள்ளப்படுகிறது.
  இதையொட்டி, காலை 10 மணியளவில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படவுள்ளன. தொடர்ந்து  ராகு- கேது பெயர்ச்சி நேரமான பிற்பகல் 2.02 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்படவுள்ளது.
  பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், பரிகார ஹோமத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறும், பெயர்ச்சியின்போது நடைபெறும் ஆராதனையில் பங்கேற்று வழிபாடு நடத்துமாறும் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai