சுடச்சுட

  

  காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) சார்பில், காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) வானொலி உழவர் தினம் நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து, காரைக்கால் வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜி. சுவாமிநாதன் கூறியது:
  மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வோர் ஆண்டும் பிப்.14-ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, காரைக்கால் வானொலி சார்பில், திருநள்ளாறு அருகே மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி 10 மணிக்கு தொடங்கும் இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தலைமை வகிக்கிறார். புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தொடங்கி வைக்கவுள்ளார். இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகம், தேனீ வளர்ப்பு, நாட்டு மாடு வளர்ப்பு உள்ளிட்ட தங்கள் வேளாண் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். மேலும் வேளாண் வல்லுநர்கள் பலர் பங்கேற்று விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அளிக்கவுள்ளனர். இவ்விழாவில் காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai