சுடச்சுட

  

  திருநள்ளாறு: ரூ. 39 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

  By DIN  |   Published on : 13th February 2019 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநள்ளாறு அருகே  ரூ.39 லட்சம்  செலவில் கிராமப்புற சாலை மேம்பாட்டுப் பணியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
  திருநள்ளாறு தொகுதி கருக்கன்குடி முதல் தேவமாபுரம் வரையிலான சாலை மற்றும் செருமாவிலங்கை முதல் பத்தக்குடி சிவன் கோயில் வரையிலான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கும்படி தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரான அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்,   ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம். கந்தசாமியிடம் கேட்டுக்கொண்டார்.
  அதன்பேரில், ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகம் மூலம் கருக்கன்குடி சாலைப் பணியை மேம்படுத்த ரூ. 8.75 லட்சம், செருவிலங்கை சாலையை மேம்படுத்த ரூ. 29.29 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இந்த நிதியில் சாலைப் பணியை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை இரண்டு கிராமப் பகுதியிலும் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு திட்டப்பணியை தொடங்கிவைத்தார்.
  இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழக அதிகாரிகள், கிராமத்தினர் கலந்துகொண்டனர். 
  இதில் கருன்கன்குடி சாலைப் பணி 3 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் எனவும், செருமாவிலங்கை சாலைப் பணி 6 மாதங்களில் நிறைவு செய்யப்படும் என கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீர்கேடான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததற்காக கிராமத்தினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai