முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
நெடுங்காடு பகுதியில் ரூ.21 லட்சத்தில் சமுதாயக் கூடம்
By DIN | Published On : 28th February 2019 05:57 AM | Last Updated : 28th February 2019 05:57 AM | அ+அ அ- |

நெடுங்காடு பகுதி வடகட்டளை கிராமத்தில் ரூ.21 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வடகட்டளை கிராமத்தில் வாழும் மக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளும் வகையில், சமுதாய நலக் கூடம் கட்டித் தருமாறு சட்டப் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனடிப்படையில், சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.21 லட்சத்தை பேரவை உறுப்பினர் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு ஒதுக்கீடு செய்தார். இந்த பணிக்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த கட்டுமானப் பணி 6 மாத காலத்துக்குள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.