சுடச்சுட

  

  காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் அரங்கில் மாதாந்திர கலை விழா சனிக்கிழமை (ஜன.12) நடைபெறுகிறது.
  இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நூலகத் தகவல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   காரைக்கால் மாவட்ட கலைப் பாண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் மாதாந்திர கலைவிழா, சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் அம்பகரத்தூர் அருள்மிகு மகா மாரியம்மன் அரங்கில்  நடைபெறகிறது.
  இந்நிகழ்ச்சியில், அம்பகரத்தூர் பத்ரகாளி கிராமிய கலைச் சங்கம் பா.முருகபூபதியின் நாட்டுப்புற கலைகளும் , அம்பை கலைவாணர் நாடக மன்றம் ஜி.ராஜேந்திரன் குழுவினரின் "சிவனருள் பெற்ற சீராளன்' (சிறுதொண்டர் நாயனாரின் திருவரலாறு) நாடகமும் நடைபெறவுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai