சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த  அடையாளம் தெரியாத நபர் சாவு

  By DIN  |   Published on : 12th January 2019 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  திருநள்ளாறு காவல் சரகத்துக்குள்பட்ட அருள்மிகு சீதாளதேவி மாரியம்மன் கோயில் அருகில் கடந்த டிச. 27-ஆம் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவ ர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரை போலீஸார் மீட்டு, காரைக்கால்அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் யார் என்பது தெரியவரவில்லை.
  இந்நிலையில், அந்த நபர் சிகிச்சைப் பலனின்றி ஜன.4-ஆம் தேதி உயிரிழந்தார். 153 செ.மீ. உயரமுள்ள அந்த நபர், கருப்பு மற்றும் வெள்ளை நிற தலைமுடி, மாநிறம், வட்டவடிவமான முகாம், 2 கால் முட்டிகளிலும் தழும்பு ஆகிய அடையாளங்களுடன் இருந்தார். நீல நிற கோடு போட்ட அரைக் கை சட்டை, நீலம் மற்றும் வெள்ளை நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார்.
  இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் திருநள்ளாறு காவல்  நிலையத்துக்கு 04368-236465 என்ற  தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai