சுடச்சுட

  

  கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல். வீரவல்லபன் வேண்டுகோள் விடுத்தார்.
  கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், காரைக்கால் கடலோர காவல் பிரிவு ஏற்பாட்டின் பேரில், காவல்துறையினர் மற்றும் கடற்கரையோரங்களில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   இக்கூட்டத்தில், பங்கேற்ற காரைக்கால் மாவட்ட, வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் பேசியது:
  கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாட்டம், பொருள்கள், படகுகள் போக்குவரத்து குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள், பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்கள் போன்றவைகள் நிகழ்ந்தாலோ அல்லது அதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவந்தாலோ காவல்துறைக்கு தெரியப்படுத்தி, கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.வியாபாரிகள் ஒருவருக்கொருவர் மோதல் போக்கு இல்லாமல், அமைதியான வகையில் வியாபாரத்தில் ஈடுபடவேண்டும் என்றார்.
  கூட்டத்தில், கடலோர காவல் நிலைய ஆய்வாளர் த. சுப்பிரமணியன் மற்றும் போலீஸார், கடற்கரையோரங்களில் சிறு வியாபாரம் செய்வோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai