சுடச்சுட

  

  காரைக்கால் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. 
  காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் (பொ) கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவை காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.யு. அசனா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தொடங்கி வைத்தார். விழாவில், மாணவிகள் சர்க்கரை பொங்கலிட்டு, கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு செய்தனர். விழாவில், மாணவிகளின் கோலாட்டம் நடைபெற்றது. இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அன்சாரிபாபு, முன்னாள் தலைவர் பாரீஸ் ரவி, நகராட்சி மேலாளர் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்: இதேபோல், காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை கல்லூரி முதல்வர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதேபோல், அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை, கல்லூரி முதல்வர் குணசேகரன், காரைக்கால் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை கல்லூரி இயக்குநர் சங்கரநாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai