சுடச்சுட

  

  காரைக்கால், கோவில்பத்து பகுதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  காரைக்கால், கோவில்பத்து பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில், ஸ்ரீஆண்டாள் சர்க்கரை பொங்கல் வைத்து பெருமாளை வழிபட்டதை நினைவு கூறும் வகையில் நடைபெறும் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
  நிகழ்ச்சியையொட்டி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், உத்ஸவர் ஸ்ரீ கோதண்டராமர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai