கடுமையான முயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்: சார்பு ஆட்சியர் பேச்சு

கடுமையான முயற்சி இருந்தால் மட்டுமே ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜா தெரிவித்தார்.

கடுமையான முயற்சி இருந்தால் மட்டுமே ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜா தெரிவித்தார்.
காரைக்காலில் மாவட்ட கல்வித் துறை மற்றும் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், இரண்டு நாள் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது: ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐஏஎஸ் தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இதிலிருந்து 1,100 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் 180 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து நடத்தப்படும் தனித்திறமைகளுக்கான தேர்வில் தாய் மொழியிலேயே அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால், மாணர்வர்கள் தாய்மொழியை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.  பள்ளி பருவத்தில் உள்ள மாணவர்கள், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். தேவையற்ற எண்ண சிதறல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது, நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் எதிர் காலத்துக்கான முடிவாக அமைந்து விடாது. ஒரு பட்டப் படிப்பை முடித்தப் பின்னர் ஐஏஎஸ் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சியைப் பெறலாம். போதிய பயிற்சியோடு கடும் முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் விக்ராந்ராஜா.  நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ. அல்லி,துணை இயக்குநர் கேசவ், சமுதாய நலப்பணித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ. குழந்தைசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பேசினர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com