சுடச்சுட

  


  காரைக்கால் ஓ.என்.ஜி. சி. பொதுப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள், தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பள்ளி வளாகத்தில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
  இவ்விழாவையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறள், பாஞ்சாலி சபதம் ஒப்பித்தல் மற்றும் கபடி, கைப் பந்து, இறகுப் பந்து, கால்பந்து மற்றும் கையெறிப் பந்து போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  ஓ.என்.ஜி.சி. காவேரி அசட் மேலாளர் வி.வி. மிஸ்ரா, பொது மேலாளர் ஜி. வெங்கடேஷ்வரன், விவேகானந்தா கல்விக் குழும இணைச் செயலாளர் ஆர். ரவீந்திரன், ஓ.ன்.ஜி.சி. பொதுப் பள்ளி தாளாளர் கண்ணன்ஆகியோர் விவேகானந்தர் குறித்துப் பேசினர். முன்னதாக பள்ளி முதல்வர் சுவாமிநாதன் வரவேற்றார்.
  விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என திரளானோர் விழாவில்கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai