சுடச்சுட

  


  காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.
  திருப்பட்டினம் அருகே உள்ள கீழையூர் லிங்கத்தடி தெற்குபேட் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், தனது மாடி வீட்டின் பின்புறத்தில் கொட்டகை அமைத்துள்ளார். இந்த கொட்டகையில் சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து தீ மளமளவெனப் பரவி, அருகில் உள்ள முருகவேல், குமார் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் பரவி பற்றி எரிந்தது.
  காரைக்கால் தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் 3 குடிசைகளும் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால், இந்த வீடுகளுக்குள் இருந்த பொருள்களும் கருகின. இப்பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, முருகவேல் அளித்த புகாரின் பேரில், திருப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  இப்பகுதியில் கடந்த 9-ஆம் நேரிட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் சேதமடைந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai