மாங்கனித் திருவிழா பந்தலில் நலவழித்துறையின் விழிப்புணர்வுக் கண்காட்சி தொடக்கம்

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, நலவழித்துறை சார்பில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, நலவழித்துறை சார்பில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி அரசின் நலவழித்துறை சார்பில் மாங்கனித் திருவிழா பந்தல் பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் மற்றும் பிச்சாண்டவர் மகா அபிஷேகம்  நடைபெறும் 14, 15 -ஆம் தேதிகளில் இந்த பகுதியில் திரளான மக்கள் வருகை தருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதை காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் மருத்துவர் கே.மோகன்ராஜ்  திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதுகுறித்து நலவழித்துறையினர் கூறியது:
  நலவழித்துறையின் நோய் தடுப்புப் பிரிவு சார்பில் இக்கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப நலன், ஊட்டச்சத்து, எச்.ஐ.வி., சுகாதாரம், கொசு ஒழிப்பு மற்றும் தாய்ப் பாலூட்டுவதால் ஏற்படும் பயன்கள்,  கொசுக்களினால் ஏற்படும் நோய்கள், கொசு உற்பத்தி இல்லாமல் சுகாதாரமாக வாழ்விடங்களை வைத்துக் கொள்வது குறித்தும் படம் மற்றும் விளக்கங்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்கள், இவைகளுக்கான சிகிச்சை முறை, விழிப்புணர்வுகள், உணவு தரும் முறைகள் குறித்த பல்வேறு விளக்கங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. திருவிழாவுக்கு வரும் மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த கண்காட்சியை நேரில் பார்வையிட்டு பயனடையலாம் என கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூகப்பணியாளர் ஜி.குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com