பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் காவேரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

காரைக்கால் காவேரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் அருகேயுள்ள காவேரி பொதுப்பள்ளியில் வருடாந்திர பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையிலான மாணவ மாணகள் பலர் கண்காட்சியில் பங்கேற்று, உடல் நலம், தகவல் தொடர்பு, நீர் மேலாண்மை, வேளாண்மை, மின்சார சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்வேறு அறிவியல் மாதிரிகளை வைத்திருந்தனர்.
கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி. குணசேகரன் கலந்து கொண்டார். வகுப்பறைக் கூடத்தில் மாணவர்கள் வைத்திருந்த பல்வேறு அறிவியல் மாதிரிகளைப் பார்வையிட்டு, அதன் விவரங்களை கல்லூரி முதல்வர் கேட்டறிந்து பின்னர் அவர் பேசியது: பள்ளி அளவிலேயே அனைத்து மாணவர்களும் அறிவியல் சிந்தனையை வலுவாக வளர்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். கல்லூரி அளவில் அதன் திறன் மேம்படுத்தி, அறிவியல் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் குறிப்பாக ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கான தளமாக கல்விக் கூடங்கள் இருப்பதை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார். நடுவர் குழுவினர்களால் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டன. பள்ளி முதல்வர் பி. சிவக்குமார் தலைமையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த படைப்புகளை வைத்திருந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com