Enable Javscript for better performance
ஜூலை 25, 26 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 25, 26)  மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  காரைக்கால் பிள்ளைத் தெருவாசலில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் மாற்றி மற்றும் துணை மின் நிலைய சாதனங்களில் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை, நண்டலாறு பாலம் முதல் காரைக்கால் கென்னடியர் வீதி வரை குறிப்பாக பூவம் கோட்டுச்சேரி, கீழகாசாக்குடி, புதிய பேருந்து நிலையம், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர், காளிக்குப்பம், அக்கம்பேட்டை, கோட்டுச்சேரிமேடு, கீழகாசாக்குடிமேடு, திருவேட்டக்குடி, தலத்தெரு, கோயில்பத்து பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதேபோல், வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை காரைக்கால் மாமா தம்பி மரைக்காயர் வீதி முதல் அரசலாறு பாலம் வரை, புதுத்துறை, தருமபுரம், பிள்ளைத்தெருவாசல், கீழசுப்ராயபுரம், மேலசுப்ராயபுரம், கீழாவூர், ஓ.என்.ஜி.சி. காலனி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai