Enable Javscript for better performance
நிரவி-திருப்பட்டினம் தொகுதியினருக்கு வீடு கட்ட நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    நிரவி-திருப்பட்டினம் தொகுதியினருக்கு வீடு கட்ட நிதியுதவி

    By DIN  |   Published on : 25th July 2019 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிரவி - திருப்பட்டினம் தொகுதியினருக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.27.10  லட்சம் தொகைக்கான  ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர் புதன்கிழமை  வழங்கினார்.
    மத்திய அரசின் அனைவருக்கும் வீடு  கட்டும் திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடு கட்டும் வகையில் நிதியுதவி செய்யப்படுகிறது. புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட அரசுத்துறைகள் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
    காரைக்கால் மாவட்டம் முழுவதும் இந்த திட்டத்தில் பயனடையும் வகையில் வீடற்றவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர். இவை பரிசீலிக்கப்பட்டு தொகுதிவாரியாக திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருநள்ளாறு தொகுதியினருக்கு ரூ.67 லட்சம் நிதிக்கான ஆணையை அண்மையில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வழங்கினார். தொடர்ந்து, நிரவி - திருப்பட்டினம் தொகுதியை சேர்ந்தோருக்கு திட்ட உதவிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருப்பட்டினத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
    முதல் தவணையாக 13 பேருக்கு ரூ.70 ஆயிரம் வீதமும், 2-ஆவது தவணையாக 20 பேருக்கு தலா 90 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.27.10 லட்சம் தொகைக்கான ஆணையை பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் வழங்கினார். 
    நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலைப் பொறியாளர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai