Enable Javscript for better performance
பிரான்ஸ் எம்.பி.யை முற்றுகையிட்ட காரைக்கால் மக்கள்: பிரெஞ்சுப் பள்ளியை மூட எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிரான்ஸ் எம்.பி.யை முற்றுகையிட்ட காரைக்கால் மக்கள்: பிரெஞ்சுப் பள்ளியை மூட எதிர்ப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் செயல்படும் பிரெஞ்சுப் பள்ளியை மூட எதிர்ப்பு  தெரிவித்து, பிரான்ஸிலிருந்து வந்த எம்.பி.யை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
     காரைக்கால் தெய்தா வீதியில் பிரெஞ்சு பள்ளி செயல்படுகிறது.  1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பாட வகுப்புகள் நடைபெறுகின்றன.தற்போது இப்பள்ளியில்  24 மாணவ, மாணவிகள் படித்து
    வருகின்றனர்.
     பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி, உள்ளூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலரும் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் அரசு, இப்பள்ளி மூடப்படும் என்றும், இனிமேல் யாரும் இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்றும் அண்மையில் அறிவித்தது.  அதன்படியே அண்மையில் பள்ளிக் கட்டடத்தை தூதரகத்தினர்  மூடிவிட்டதாகவும்
    கூறப்படுகிறது.
    இது பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  காரைக்காலில் உள்ள இப்பள்ளியை மட்டும் மூடுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  இந்நிலையில், பிரான்ஸ் எம்.பி., ஷான் ஈவ் லெக்கோந்த் புதன்கிழமை  காரைக்காலுக்கு வந்தார்.  தெய்தா வீதியில் உள்ள  பிரெஞ்சு பள்ளி கட்டடத்துக்கு சென்றார். அவரை பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ சங்கத்தினர் முற்றுகையிட்டு, பள்ளி தொடர்ந்து இயங்குவதற்கும், பள்ளியை ஒருபோதும் மூடக்கூடாது என்று வலியுறுத்தினர்.  அப்போது இது சம்பந்தமாக புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் தூதரக  அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் பேசுவதாக எம்.பி. தெரிவித்தார்.
    இதுகுறித்து பெற்றோர்கள் கூறியது:
     பிரெஞ்சு கலாசாரத்தில் இருக்கும் காரைக்கால் பகுதியில் இப்பள்ளி ஒன்றுதான் அதன் நினைவாக உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். திடீர் என இப்பள்ளியை மூடுவது என்றால், அந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகும். 
    எனவே, இப்பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி.யிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
    இதற்கு பிறகும் பள்ளியை மூடுவது என்று முடிவெடுத்தால், ஒட்டுமொத்த மக்கள் ஆதரவோடு தொடர் போராட்டங்களில்ஈடுபடுவோம் என்றனர்.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai