Enable Javscript for better performance
புனித சந்தனமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
    காரைக்கால் அருகே உள்ள பிள்ளைத்தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவின் முதல் நாளான புதன்கிழமை மாலை கொடியேற்றம் நடைபெற்றது. காரைக்கால் பங்கு குரு  கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. அருட் சகோதரிகள் உள்ளிட்ட  கிராம மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரண்டாவது நாளான இன்று வியாழக்கிழமை சிறிய தேர் பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து நற்செய்தி ஜெபக் கூட்டம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, 7 மணிக்கு மின்விளக்கு அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்படுகிறது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிள்ளைத்தெருவாசல் கிராமத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர், மாதர் சங்கத்தினர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai