முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
விபத்துகளைத் தடுக்க தடுப்புக் கட்டைகள் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 30th July 2019 07:03 AM | Last Updated : 30th July 2019 07:03 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதியில் விபத்துகளைத் தடுக்க முக்கிய இடங்களில் தடுப்புக் கட்டைகள் (பேரிகார்டு) அமைக்க வேண்டும் என்று தமுமுக வலியுறுத்தியுள்ளது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை தமுமுக மற்றும் மமக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரைக்கால் டூப்ளக்ஸ் வீதி, லெமர் வீதி பாலம் புதிய சந்திப்புகளில் விபத்துகளை தவிர்க்கும் வகையில்போக்குவரத்த்துத் துறை தடுப்புக் கட்டைகள் (பேரிகார்டு) அமைக்க வேண்டும், காரைக்கால் பெரியப் பள்ளிவாசல் அருகே குறுகலான திருநள்ளாறு சாலையில் தனியார் பேருந்து நிறுவனம் தமது பேருந்துகளை மாலை நேரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்கால் பெசன்ட் நகர், டி.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களை முறையாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தூர்வாரி மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும், காரைக்கால் எம்.ஜி.ஆர் நகர் என்கிற சுனாமி நகர் பகுதிகளில் சாக்கடைகளை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும், நகரின் முக்கிய விதிகளிலும் மற்றும் உட்புற சாலைகளிலும் வெறி நாய்கள், குதிரை, மாடு, பன்றிகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, காரைக்கால் நகராட்சி நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரத் தலைவர் முகம்மதுஷெரீப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட தொண்டரணி செயலர் முஹம்மது யூசுப், மமக மாவட்ட விவசாய அணிச் செயலர் டேவிட், தமுமுக மாவட்ட ஊடகப் பிரிவு பொருளாளர் நாசர், தமுமுக நகர செயலர் சதாம் உசேன், மமக நகரச் செயலர் ஹாஜாமைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.